செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் குட்டிகளை ஈன்ற அனகோண்டா பாம்பு… ஊழியர்கள் மகிழ்ச்சி… கண்ணாடி கூண்டில் வைத்து பராமரிப்பு…!! Revathy Anish23 July 2024056 views சென்னை அருகே உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்குகள் பறவைகள் ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு வளர்க்கப்பட்டு வரும் உலகின் பெரிய பாம்புகளில் ஒன்றான மஞ்சள் அனகோண்டா வகை பாம்புகள் 20 குட்டிகளை ஈன்றுள்ளது. ஒரு பாம்பு 11 குட்டிகளையும், மற்றொரு பாம்பு 9 குட்டிகள் என மொத்தம் 20 குட்டி அனகோண்டா பாம்புகள் உள்ளன. இந்த குட்டி அனகோண்டா பாம்புகள் தற்போது கண்ணாடி கூண்டில் அடைத்து பூங்கா ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர். மேலும் 20 குட்டி அனகோண்டா பாம்புகள் பிறந்ததால் பூங்கா அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் இந்தியாவில் மட்டும் காணப்படும் காட்டு பூனையும் 3 குட்டிகள் ஈன்றுள்ளது.