இராமநாதபுரம் செய்திகள் மாவட்ட செய்திகள் “ஆனி அமாவாசை”… ராமேஸ்வரத்திற்கு படையெடுத்த பக்தர்கள்… புனித நீராடி வழிபாடு… Revathy Anish5 July 2024054 views ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இன்று ஆனி அமாவாசை என்பதால் தம் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கடலில் குவிந்துள்ளனர். இவர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். இதனையடுத்து அவர்கள் அங்குள்ள 22 தீர்த்த கிணறுகளில் குளித்து விட்டு கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலை சுற்றி 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.