செய்திகள் மாநில செய்திகள் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மற்றொரு வழக்கறிஞர் கைது… விசாரணையில் சிக்கும் வக்கீல்கள்…!! Revathy Anish26 July 20240116 views பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இதுவரை 15-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தா.மா.க முன்னாள் நிர்வாகி ஹரிஹரின் என்பவரை கைது செய்து நடத்திய விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மற்றொரு வக்கீல் ஒருவருக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி திருவள்ளூர் மாவட்டம் மாத்தூர் பகுதியை சேர்ந்த சிவா என்ற வழக்கறிஞரை போலீசார் கைது செய்து எலும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். மேலும் இவர் தலைமறைவாகியுள்ள ரவுடி சம்போ செந்திலுடன் சேர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கொலையாளிகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்திருப்பது உறுதியானது. மேலும் சிவாவின் வீட்டில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 9 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி அவரை பூவிருந்தவள்ளி சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இதுவரையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் 5 பேர் வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.