கிருஷ்ணகிரி செய்திகள் மாவட்ட செய்திகள் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ரைடு… சிக்கிய கணக்கில் வராத பணம்… சோதனை சாவடியில் பரபரப்பு…!! Revathy Anish5 July 2024084 views கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடியில் உள்ள ஆர்.டி.ஓ. சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. வடிவேலு தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் 2,25,950 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். இந்த பணம் கணக்கில் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மோட்டார் வாகன ஆய்வாளர் நிர்மல் குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.