ஜூலை 31 வரை அந்தியோதயா ரயில் ரத்து… ரயில்வேத்துறை வெளியிட்ட அறிவிப்பு…!!

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள தாம்பரம் பணிமனையில் சிக்னல் மேம்பாடு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் 23 (நாளை) முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை தம்பரத்திற்கு வரும் ரயில்களின் சேவை மற்றும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் தாம்பரம்-நாகர்கோவில்-தாம்பரம் வரை செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நாளை 23 முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

அதே போல் தாம்பரம் நாகர்கோவில் செல்லும் மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்றும், நாகர்கோவிலில் இருந்து வரும் ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும் என கூறியுள்ளனர். மேலும் செங்கோட்டை-தாம்பரம்-செங்கோட்டை ரயில்கள் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் மாறுமார்க்கமாக விழுப்புரம் வந்தடையும் என தெரிவித்துள்ளனர். இதேபோல் பல்வேறு ரயில் சேவையை ரத்து செய்துள்ளனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!