கரூர் செய்திகள் மாவட்ட செய்திகள் நீதிமன்றத்தில் ஆஜர்… எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு நீதிமன்ற காவல்… திரண்ட அதிமுகவினர்….!! Revathy Anish20 July 2024091 views 100 கோடி ரூபாய் நிலமோசடி வழக்கில் சிக்கிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டு கரூருக்கு அழைத்து வரப்பட்டார். இதனை அடுத்து கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி மகேஷ் முன்பு ஆச்சார்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வருகின்ற 30-ஆம் தேதி வரை எம்.ஆர்.விஜயபாஸ்கரை நீதிமன்ற காவலில் வைக்க ஆணையிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் போலீசார் திருச்சி மத்திய சிறையில் விஜயபாஸ்கரை பாதுகாப்புடன் அழைத்துச்சென்று அடைத்துள்ளனர். மேலும் நீதிமன்ற வளாகத்தில் அ.தி.மு.க.வினர் பலரும் திரண்டதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.