செய்திகள் மாநில செய்திகள் தியாக உள்ளதை போற்றுகிறேன்… உயிரிழந்த டிரைவருக்கு முதலமைச்சர் இரங்கல்…!! Revathy Anish26 July 2024087 views திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியின் வாகன ஓட்டுநராக மலையப்பன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் குழந்தைகளை அவரது வீட்டில் கொண்டு விடுவதற்காக பள்ளி வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது பள்ளி குழந்தைகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாகனத்தை சாலையோரம் நிறுத்தினார். இதனையடுத்து மலையப்பன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மலையப்பன் அவர்களின் கடமை உணர்ச்சியையும், தியாக உள்ளதையும் தலை வழங்கி போற்றுகிறேன் எனவும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.