உறவினரிடையே நடந்த தகராறு… கத்தியால் குத்தி தொழிலாளி கொலை… மார்க்கெட்டில் பரபரப்பு…!!

திருச்சி மாவட்டம் வடக்கு தாராநல்லூரில் வசித்து வந்த சுரேஷ் என்பவர் காந்தி மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்த போது அவரது உறவினர் சந்திரகுமாருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சந்திரகுமார் அவர் வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷை குத்தினார்.

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சுரேஷ் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்திரகுமாரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!