கோவிலில் ஏற்பட்ட தகராறு… வடமாநில பக்தர் காயம்… போலீஸ் விசாரணை…!!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் ராமேஸ்வரம் வந்திருந்தனர். அவர்கள் கோவிலின் 3-ஆம் பிரகாரத்தின் மைய வாசல் வழியாக உள்ளே நுழைந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் நின்று இருந்த கோவில் பணியாளர்கள் டிக்கெட் எடுத்தால் மட்டுமே இந்த பாதையில் செல்ல முடியும் என கூறியுள்ளனர்.

இதனால் பக்தர்களுக்கும் கோவில் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவாஜி மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோவில் பணியாளர்கள் சிலர் திடீரென வட மாநில பக்தர் நிகில் குமார் என்பவரை தாக்கி உள்ளனர்.

இந்த மோதலில் நிகில் குமாருக்கு தலையிலும், இன்ஸ்பெக்டர் சிவாஜி கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வேண்டும் என துணை சூப்பிரண்டு போலீஸ் அதிகாரி உமாதேவி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!