லைசென்ஸ் கேட்டதால் தகராறு… பெண் போலீசை தகாத வார்த்தையில் பேசிய வாலிபர்… 3 பிரிவுகளின் கீழ் கைது…!!

ஈரோடு மாவட்டம் மேட்டூர் முனிசிபல் காலனி பகுதியில் வடக்கு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா அவர்கள் போக்குவரத்து சீர் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் இருசக்கரவாகனத்தில் வந்த 3 வாலிபர்களை தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில் ரேணுகா அவர்களிடம் ஓட்டுனர் உரிமர், ஆர்.சி. புக் ஆகியவை கேட்டபோது அந்த வாலிபர்களின் ஒருவரான யோகேஷ் தகராறில் ஈடுபட்டார். மேலும் ரேணுகாவை தகாத வார்த்தைகளில் திட்டியதோடு மட்டுமல்லாமல் சட்டையை கழற்றிவிட்டு சாலையில் படுத்து உருண்டுள்ளார்.

இதனை செல்போனில் வீடியோவாக எடுத்துக்கொண்டிருந்த ரேணுகாவின் செல்போனையும் தட்டிவிட்டுள்ளார். இதுகுறித்து ரேணுகா ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசில் தகவல் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யோகேஷை கைது செய்தனர். மேலும் அவர் மீது அரசு அதிகாரியை பனி செய்யவிடாமல் தடுத்தது, தகாத வார்த்தையில் பேசியது என 3 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!