சென்னை பெரம்பூரில் வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது உடலை பெரம்பூரில் இருக்கும் கட்சி வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டத்தில் அடக்கம் செய்து கொள்ளலாம் என்றும், பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மணிமண்டபம் கட்டி கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலை ஆவடி பொத்துரில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஒப்புதல் அளித்த நிலையில் இறுதி சடங்கிற்க்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் இன்று 5 மணி அளவில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.