ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல… திருமாவளவன் பேட்டி…

சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் முன்பு வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினர் பலரும் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கோர சம்பவத்திற்கு பல அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து விடுதலை கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், ஆம்ஸ்ட்ராங் உடலை பொதுமக்கள் பார்வைக்கு பெரம்பூர் தனியார் பள்ளியில் வைப்பதற்கு அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில் அவரது உடலை அவர் கட்சி அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்வதற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த 8 பேர் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்றும், உண்மையான கொலையாளிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் தென்மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் கொலைகளை தடுத்து, சாதியவாத கும்பல், கூலிப்படை கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!