Home செய்திகள் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாணயம்… ரூ. 2,500க்கு விற்பனை… மத்திய அரசின் அறிவிப்பு…!!

கலைஞர் கருணாநிதியின் நினைவு நாணயம்… ரூ. 2,500க்கு விற்பனை… மத்திய அரசின் அறிவிப்பு…!!

by Revathy Anish
0 comment

மறைந்த தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பெயரில் 100 ரூபாய் மதிப்பிலான நினைவு நாணயம் வெளியிடும்படி முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சகத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதனுடைய அதிகாரப்பூர்வ வெளியீடு கடந்த 12ம் தேதி மத்திய அரசு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் தெரிவிக்கையில், இந்த 100 ரூபாய் மதிப்பிலான நாணயத்தில் ஒரு பக்கத்தில் சிங்கத்தின் தலையுடன் கூடிய அசோகத்தூண் மற்றும் பாரத், சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தைகளும், மறுபக்கத்தில் கருணாநிதியின் உருவப்படமும் தமிழ் வெல்லும் என்கின்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து கலைஞரின் பிறந்த நூற்றாண்டு 1924 2004 என தேவநாகரி எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் 50% வெள்ளி,40% தாமிரம் 10% நிக்கல் மற்றும் துத்தநாகம் முறையில் தயாரிக்கப்படும் இந்த நாணயம் 35 கிராம் எடை கொண்டதாக இருக்கும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நாணயம் முறையாக அச்சிடப்பட்ட ரிசர்வ் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் எனவும், ஒரு நாணயம் 2,500 ரூபாய்க்கு விற்பனை ஆகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.