ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி… 2 பேர் ஜாமீன் தள்ளுபடி… நீதிமன்றம் தீர்ப்பு…!!

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு முதலீடு நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ளனர். இந்த நிறுவனத்தின் கிளைகள் சென்னை, திருவள்ளூர், ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த சுமார் 1 லட்சம் பேரிடம் இருந்து 2,438 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர் ரூசோ, கிளை மேலாளர்கள் என 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கிளை மேலாளர்கள் அருண்குமார் ஜெனோவா ஆகியோர் ஜாமீன் அளிக்குமாறு ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள நபர்கள் கைது செய்யப்படும் வரையில் ஜாமீன் வழங்கக் கூடாது என உத்தரவிட்டு அவர்களின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!