உயிரிழக்கும் நேரத்திலும்… பல உயிர்களை காப்பாற்றிய டிரைவர்… திருப்பூர் அருகே சோகம்…!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.பி.சி. நகர் பகுதியில் வசித்து வரும் மலையப்பன் என்பவருக்கு மனைவியும், ஹரிஹரன்(17), ஹரிணி(15) என்ற 2 பிள்ளைகளும் உள்ளனர். இவர் அய்யனூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல பள்ளி முடிந்ததும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டில் விடுவதற்காக சென்று கொண்டு இருந்தார். அப்போது வெள்ளகோவில் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது மலையப்பனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

மூச்சு விட முடியாமல் தவித்த அவர் வாகனத்தில் இருந்த குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் சிரமப்பட்டு வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தினார். பின்னர் சிறிது வினாடியிலேயே மலையப்பன் இருக்கையில் அமர்ந்தபடி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த வெள்ளகோவில் காவல்துறையினர் மலையப்பன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!