செய்திகள் தூத்துக்குடி மாவட்ட செய்திகள் பீடி இலைகள் கடத்த முயற்சி… வசமாக சிக்கிய இருவர்…30 கிலோ இலைகள் பறிமுதல்…!! Revathy Anish22 July 20240109 views தூத்துக்குடி மாவட்டம் கடலோர பகுதிகள் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நள்ளிரவில் கல்லாமொழி கடற்கரை பகுதிக்கு வந்த லோடு வேன் ஒன்று வந்தது. அதை நிறுத்தி சோதனை செய்தபோது 30 கிலோ எடை கொண்ட பீடி இலை கட்டுகள் இருந்தது. இதுகுறித்து வாகனத்தை ஒட்டி வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் காரைக்குடியை சேர்ந்த விஜயகாந்த், நெல்லையை சேர்ந்த பாண்டியன் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் பீடி கட்டுகளை சட்ட விரோதமாக கடத்த முயன்றது தெரியவந்த நிலையில் போலீசார் அவர்கள் 2 பேரை கைது செய்தனர். இதனையடுத்து 30 கிலோ பீடி இலை, லோடு வேன், கடத்தலுக்கு பயன்படுத்திய பைபர் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்த்தனர். பீடி இலைகளின் மதிப்பு 75 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.