கஞ்சா கடத்த முயற்சி… 200 கிலோ பறிமுதல்… ஊராட்சி துணை தலைவர் உள்பட 5 பேர் கைது…!!

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே உள்ள நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த 3சொகுசு கார்களை நிறுத்தி சோதனை செய்ததில் 200 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தி, அவரது சகோதரர் சிவமூர்த்தி, திருப்பூர் சேர்ந்த மணிராஜ், புதுக்கோட்டையை சேர்ந்த கௌதம் ஆகியோரை கைது செய்தனர்.

இதுகுறித்து அவர்களிடம் நடத்தி விசாரணையில் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை வேதாரண்யத்திற்கு கொண்டு சென்று அதன் பிறகு இலங்கைக்கு கடல் மூலமாக கடத்த முயன்றது தெரியவந்தது. மேலும் கஞ்சா கடத்தலுக்கு உதவியாக இருந்த வேதாரண்யம் கொடியகாடு பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!