Home செய்திகள் சிறுவனுக்கு தவறான சிகிச்சை… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை… போலி டாக்டர் அதிரடி கைது…!!

சிறுவனுக்கு தவறான சிகிச்சை… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை… போலி டாக்டர் அதிரடி கைது…!!

by Revathy Anish
0 comment

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பண்பொழி திருமலை கோவில் அருகே பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவியும், கவுசிக்(10) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கவுசிக் கடந்த 7-ஆம் தேதி சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த மருத்துவர் தலையில் இருந்த காயத்தை சுத்தம் செய்யாமலே மொத்தம் 14 தையல் போட்டுள்ளார்.

இதனையடுத்து கவுசிக் தொடர்ந்து வலியால் துடித்ததால் அவரது பெற்றோர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனை பார்த்த மருத்துவர்கள் சிறுவனுக்கு உடனடியாக மறுசிகிச்சை அளித்து அவரச சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். மேலும் சரியான நேரத்தில் வந்ததால் சிறுவனின் காயத்தை சுத்தம் செய்ய முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் அந்த தனியார் மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில் சுகாதாரப்பணி இணை இயக்குனர் பிரேமலதா தலைமையில் மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் மற்றும் மருத்துவக்குழுவினர் ஆய்வு நடத்தினர்.

அந்த சோதனையின் போது தனியார் மருத்துவமனை கட்டிடத்தின் உரிமையாளர் கேரளா கொல்லம் பகுதியை சேர்ந்த அமீர் ஜலால் என தெரியவந்தது. மேலும் மருத்துவம் படிக்காமல் அவர் நெல்லையை சேர்ந்த அரசு மருத்துவர் பெயரில் போலியாக போர்டு வைத்து 17 ஆண்டுகள் மருத்துவம் செய்து வந்ததை கண்டறிந்தனர். இதுகுறித்து அச்சன்புதூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அமீர் ஜலாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.