பொன் மாணிக்கவேல் முன் ஜாமீன் விசாரணை… வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள்…

பழமையான சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் நெல்லை போலீஸ் அதிகாரியான காதர் பாட்ஷா மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த பொன்மாணிக்கவேல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்நிலையில் காதர் பாட்ஷா இது என் மீது போடப்பட்ட பொய் வழக்கு எனவும், பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ போலீசார் பொன்மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் பொன்மாணிக்கவேல் முன் ஜாமின் கேட்டு மதுரை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை அளித்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

அப்போது காதர் பாஷா சார்பில் பொன் மாணிக்கவேலுக்கு முன் ஜாமின் அளிக்கக்கூடாது என தெரிவித்தனர். அதேபோல் மற்றொரு தரப்பினரும் தரப்பில் இது பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்ட வழக்கு எனவும் பொன்மணிக்கவேலுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இதனை கேட்ட நீதிபதிகள் விசாரணையை இன்று ஒத்திவைத்தனர். அதன் அடிப்படையில் இன்றும் முன் ஜாமீன் மீதான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!