Home » “பக்ரீத் பண்டிகை” 4 கோடிக்கு ஆடு விற்பனை… வியாபாரிகள் மகிழ்ச்சி….!!

“பக்ரீத் பண்டிகை” 4 கோடிக்கு ஆடு விற்பனை… வியாபாரிகள் மகிழ்ச்சி….!!

by Inza Dev
0 comment

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட இருப்பதால் இஸ்லாமியர்கள் பலர் ஆடுகளை வாங்க சந்தைகளுக்கு படை எடுக்கின்றனர். அவ்வகையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆட்டுச் சந்தையில் ஏராளமான கூட்டம் கூடியது. சனிக்கிழமை தோறும் நடைபெறும் அந்த சந்தையில் நேற்று பக்ரீத்தை முன்னிட்டு சிறப்பு வியாபாரம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு வாங்குவதற்காக சந்தைக்கு பலர் வந்துள்ளனர். இந்த விற்பனையில் எடைக்கு ஏற்றவாறு ஒரு ஆடு 33 ஆயிரம் வரை விற்பனை ஆகி உள்ளது. கடந்த வருடம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 6 கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனையான நிலையில் இந்த வருடம் எட்டையாபுரம் சந்தையில் 4 கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை நடந்துள்ளது.

இதையும் படிக்கஆனந்தமாக தொடங்கிய சுற்றுலா…. ஆற்றிற்குள் பாய்ந்த வேன்… 10 பேர் பலி… இழப்பீடு தொகை அறிவித்த பிரதமர்….!!

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.