வீட்டை சுற்றி ஓடும் கரடிகள்… அச்சத்தில் பொதுமக்கள்… நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சிறுத்தை, யானை, கரடி, மான், மிளா என பல வனவிலங்குகள் வசித்து வருகிறது. கடந்த சில தினங்களாக வன விலங்குகள் மலையடிவாரத்தில் இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் கோட்டை விளைப்பட்டி கிராமத்தில் கரடிகள் ஜோடி ஜோடியாக உலா வருவதாகவும், பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் கரடிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!