செய்திகள் சென்னை மாநில செய்திகள் மக்களுக்கு செய்த துரோகம்… பாமக சார்பில் போராட்டம்… அன்புமணி ராமதாஸ் தகவல்…!! Revathy Anish18 July 2024077 views தமிழக அரசு ஜூலை 2-ஆம் தேதியில் இருந்து மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், மக்களுக்கு பாதிப்படையும் வகையில் தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது தமிழக மக்களுக்கு செய்த துரோகம் என கூறியுள்ளார். மேலும் இந்த மின்கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும், மாதத்திற்கு ஒரு முறை மின் அளவு கணக்கிட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார்.இந்த போராட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நடைபெற உள்ளது.