சூப்பிரண்டு அதிகாரி காரில் மோதிய பைக்… 2 வாலிபர்கள் பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரியாக சுந்தரவடிவேல் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் காரில் வெளியே சென்றுள்ளார். அந்த காரை தமிழ்க்குடிமகன் என்ற போலீசார் ஓட்டியுள்ளார். இந்நிலையில் அவர்கள் மேட்டுப்பாலம் அருகே உள்ள கல்லாறு தூரிப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் காரின் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்தகாயம் அடைந்தனர். இதுகுறித்து சூப்பிரண்டு அதிகாரி அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 2 பேரையும் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அந்த வாலிபர்கள் ஊட்டி காந்தல் பகுதியில் வசிக்கும் அல்தாப்(21), ஜூனைத்(19) என்பது தெரியவந்தது.

இந்நிலையில் காயமடைந்த வாலிபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அல்தாப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இன்று ஜூனைத்தும் உயிரிழந்துள்ளார். இதற்கிடையே போலீசார் காரை ஓட்டி வந்த தமிழ்குடிமகனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த வாலிபர்களின் குடும்பத்தினர் கதறி அழுதது மருத்துவமனையில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!