கன்னியாகுமரி செய்திகள் மாவட்ட செய்திகள் வெளுத்து வாங்கும் மழை…ஆறுகளில் வெள்ளப் பெருக்கு… திற்பரப்பு அருவியில் குளிக்க தடை…!! Revathy Anish18 July 20240121 views கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தினால் பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதில் கோதை ஆறு, தாமிரபரணி ஆறு மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திற்பரப்பு அறிவியல் சுற்றுலாப் பயணிகளுக்கு 3-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.