ஆட்டோ மொபைல் செய்திகள் பல்சுவை BMW-வின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்…. ஒரு சார்ஜில் 130 கிலோமீட்டர்…. வெளியான தகவல்….!! Inza Dev26 June 20240247 views BMW தங்கள் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிளை ஏற்கனவே விற்பனை செய்து வரும் நிலையில் புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. BMW CE 04 மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஜூலை மாதம் 24 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி திறன் 8.9 கிலோ மெகாவாட் என்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 130 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது. அதோடு இந்த ஸ்கூட்டருக்கு பாஸ்ட் சார்ஜிங் மூலமாக 1 மணி நேரம் 40 நிமிடங்களிலும் ஸ்டாண்டர்ட் சார்ஜிங் மூலமாக 4 மணி நேரம் 20 நிமிடங்களிலும் முழு சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். BMW நிறுவனம் இதற்கு முன்பு அறிமுகப்படுத்திய சி 400 CT மாடலின் விலை 11.20 லட்சம் ஆகும். எனவே தற்போது அறிமுகமாக இருக்கும் இந்த BMW CE 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.