நோய் தொற்றினால் சிறுவன் பலி… சைதாப்பேட்டையில் அதிரடி நடவடிக்கை… தலைமை செயலாளர் ஆய்வு…

சென்னை சைதாப்பேட்டை அபித் காலனியில் வசித்து வரும் ராஜேஷ்குமார் என்பவருக்கு யுவராஜ்(11) என்ற மகன் உள்ளார். இவர் நோய் தோற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி யுவராஜ் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அபித் காலனி பகுதியில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதனை பார்வையிட்ட கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் அப்பகுதியில் பிளிச்சீங் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளதா, வீட்டில் உள்ள குடிநீர் தொட்டிகள் சுத்தமாக இருக்கிறதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்துள்ளார். மேலும் அப்பகுதியில் 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டாக்சி சைக்ளின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் வீட்டை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும், நோய் தோற்று பரவாத வகையில் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அப்போது அவருடன் மருத்துவ பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related posts

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!