69
கடந்த செப்டம்பர் மாதம் திமுக நடத்திய மாநாடு ஒன்றில் சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பெங்களூரு நீதிமன்றத்தில் அவர் மீது சமூக ஆர்வலர் பரமேஷ் வழக்குத் தொடுத்தார்.
இதன்மீதான விசாரணையில் ஆஜராகும்படி உதயநிதிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. அதையேற்று நீதிமன்றத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜரானார். இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.