சிறுமிகளின் கொடூர பாலியல் வழக்கு… நீதிபதியின் அதிரடி தீர்ப்பு… 15 பேர் சிறையில் அடைப்பு…!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தில் 6 வயது சிறுமியும் அவரது தங்கையான 5 வயது சிறுமியும் பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் பிரசாந்த் என்பவர் அந்த இரண்டு சிறுமிகளையும் கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமிகள் இருவருக்கும் உடல் நல குறைவு ஏற்பட்டதால் அவரது பாட்டி மற்றும் தாய் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிகள் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமிகளின் தாய் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பிரசாந்த்(21) மட்டுமின்றி அதே கிராமத்தை சேர்ந்த துரைராஜ்(47), துரைசாமி(55), தீனதயாளன்(24), அஜித் குமார்(22), பிரபாகரன்(23), ரவிக்குமார்(23), அருண் என்ற தமிழரசன்(24), மகேஷ்(37), ரமேஷ்(30), மோகன்(23), செல்வசேகரன்(30), செல்வம்(37), கமலக்கண்ணன்(30), முருகன்(40) ஆகிய 15 பேர் 2 சிறுமிகளை தனித்தனியாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த 15 பேரையும் 7 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 5 வயது சிறுமி ஒருவர் உடல்நலம் மிகவும் மோசமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று முடிவடைந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த 15 குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 32,000 அபராதமும் விதித்துள்ளார். மேலும் குற்றவாளிகள் அபராத தொகையை சேர்த்து மொத்தம் 9,30,000 ரூபாயை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் 15 பேரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!