இராமநாதபுரம் செய்திகள் மாவட்ட செய்திகள் மூட்டை மூட்டையாக இருந்த கடல் அட்டைகள்… இலங்கைக்கு கடத்த முயற்சி… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!! Revathy Anish13 July 2024086 views ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இருந்து தங்கம், போதை பொருட்கள், தடை செய்யப்பட்ட கடல் உயிரினங்களான கடல் அட்டைகள், திமிங்கல எச்சம், கடல் குதிரை கடத்தி வருகின்றனர். இந்நிலையில் மண்டபம் தனிப்பிரிவு போலீசார் வேதாளை பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த காரை ஸோதனை செய்தனர். அப்போது 250 கிலோ கடல் அட்டைகளை மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தனர். அதனை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த மரைக்காயர்பட்டினத்தை சேர்ந்த சாகுல் ஹமீதை கைது செய்தனர். இந்த அட்டைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.