உணவு பார்சலில் ஊறுகாய் வைக்காததால் வழக்கு… நீதிபதி அதிரடி தீர்ப்பு…!!

விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி முருகன் கோவில் தெருவில் வசித்து வரும் ஆரோக்கியசாமி என்பவர் நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2022 நவம்பர் 28-ஆம் தேதி அவரது உறவினர் ஒருவர் நினைவு தினத்திற்காக விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் 25 சாப்பாடு பார்சலை வாங்கியுள்ளார். ஒரு பார்சல் 80 ரூபாய் வீதம் 2000 ரூபாய் கொடுத்து வாங்கினார்.

இதனையடுத்து ஆரோக்கியசாமி வீட்டிற்கு சென்று உணவை பிரித்து பார்த்தபோது அதில் ஊறுகாய் வைக்காமல் இருந்தது. இது குறித்து ஆரோக்கியசாமி ஓட்டல் உரிமையாளரிடம் ஊறுகாய் வைக்காததால்அதற்குரிய தொகையை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் உணவக உரிமையாளர் பணத்தை தர மறுத்ததால் ஆரோக்கியசாமி விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நேற்று அதற்கான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அப்போது உணவு பரிசலில் ஊறுகாய் வைக்காதது சேவை குறைபாடு என நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே உணவகத்தில் ஊறுகாய் வைக்காததற்கு 25 ரூபாயும், ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 30,000 ரூபாயும், வழக்கு நடத்தியதற்காக 5,000 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் என உணவக உரிமையாளருக்கு உத்தரவிட்டனர். இதனை செலுத்த தவறினால் மாதம் ஒன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் பணம் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Related posts

மீனம் ராசிக்கு…! செல்வம் உங்களுக்கு சேரும்…! இனிமையான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்…!!

விருச்சிகம் ராசிக்கு…! மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமைத்துக் கொள்ள முடியும்…! பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்…!!

மிதுனம் ராசிக்கு…! யோகமான சூழல் இருக்கும்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!