செய்திகள் பல்சுவை வானிலை 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!! Revathy Anish26 July 20240228 views தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளனர்.