87
இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குனராக ராகேஷ் பால் என்பவர் பணிபுரிந்தார். இவருக்கு நேற்று ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியினால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் நேரில் சென்று ராகேஷ் பாலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவருடன் தமிழக முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.