கஞ்சா போதையில் சில்மிஷம்… பெண் அளித்த புகார்… வாலிபர் உடனடி கைது…!!

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை கிருஷ்ணன் புதூர் பகுதியில் நேற்று மதியம் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை வழி மறித்து கீழே தள்ளி தகாத முறையில் ஈடுபட முயற்சித்தார். இதனால் அதிர்ச்சடைந்த அந்த பெண் உடனடியாக கூச்சலிட அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இது குறித்த அவர் வீராணம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்த கண்ணன்(27) என்பதும், கஞ்சா போதையில் சாலையில் செல்லும் பெண்களை பின் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கண்ணனை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!