செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் ஷூவில் இருந்த கொக்கைன்… வசமாக மாட்டிய இளம்பெண்… 22 கோடி போதைப்பொருள் பறிமுதல்…!! Revathy Anish27 June 2024082 views சென்னை விமான நிலையத்தில் நைஜீரியாவிலிருந்து விமானத்தில் சென்னை வந்தடைந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது கென்யாவில் இருந்து சென்னை வந்த இளம்பெண் ஒருவரை சோதனை செய்து கொண்டிருக்கும்போது அவர் காலில் அணியும் ஷூ-க்கள் வித்யாசமாக இருந்தது. அதனை சோதனை செய்தபோது ஷூக்களில் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணை உடனடியாக கைது செய்து போதைப்பொருள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து 2.2 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 22 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.