114
தொல்லியல் துறையினர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு பழங்கால பொருட்களை கண்டறிந்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருங்கூரில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது வரை அங்கு ராஜராஜ சோழன் காலத்தில் இருந்த செம்பு நாணயம் கண்டறிப்பட்டுள்ளது. 3 கிராம் எடையுள்ள அந்த நாணயம் 23.3 மி.மீ. விட்டமும், 2.5 மி.மீ தடிமன்னும் கொண்டது. இதனை தகவலை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.