இடிந்து விழுந்த பள்ளி காம்பவுண்ட்… கொடைக்கானலில் சூறை காற்று… வாகன ஓட்டிகள் அவதி…!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது சூரை காற்று வீசி வருகிறது. பகல் நேரங்களில் புழுதியில் வாரி இறைத்தபடி காற்று வீசுவதால் சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானல் மேல்மலை கிராமமான குண்டுபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் காம்பவுண்ட் சுவர் இன்று இடிந்து விழுந்துள்ளது.

பள்ளி திறப்பதற்கு முன்னரே சுவர் இடிந்ததால் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையினாலும் தற்போது வீசி வரும் சூறைக்காற்றினால் சுவர் இடிந்து விழுந்து இருக்கலாம் என தெரிவித்தனர். இச்சம்பவத்தால் மாணவர்களும், பெற்றோர்களும் அச்சத்தில் உள்ளனர். மேலும் மாவட்டத்தின் பல இடங்களில் மரங்கள் மற்றும் கிளைகள் சாலை நடுவில் முறிந்து விழுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!