கோவையில் மிகவும் பிரம்மாண்டமாக உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள தியான லிங்கத்திற்கு 1999ஆம் ஆண்டு சத்குரு அவர்களால் ஜூன் 24ஆம் தேதி முதல் முறையாக பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் நேற்று தியான லிங்கத்திற்கு 25வது பிரதிஷ்டை தின விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவின் தொடக்கமாக காலை மணிக்கு “ஆம் நமசிவாய” என்று ஈஷா பிரம்மசாரிகளால் தொடங்கப்பட்டு ஆதிசங்கரர் இயற்றிய மிகவும் சக்தி வாய்ந்த “நிர்வாண ஷடகம்” மந்திர உச்சாடனம் நிகழ்த்தினர்.
அதை தொடர்ந்து ‘சொர மே’ புத்த மடாலயம் சார்பில் துறவிகளின் புத்த மந்திர உச்சாடனம் மற்றும் தேவாரமும் பாடப்பட்டது. மேலும் சிதம்பரம் தீக்ஷிதர்களின் ருத்ர சமக வேத கோஷங்களும், இசைக்கருவிகளால் நாத ஆராதனையும், சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதியின் உச்சாடனங்களும் நடைபெற்றது.
குறிப்பாக இந்த பிரதிஷடையில் மாதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து மதத்தின் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்ட நிலையில் FSPM சிஸ்டர்ஸ் கிறிஸ்தவ பாடல்களையும், இஸ்லாமியர்கள் இஸ்லாமிய பாடல்களையும் ஆசிரம வாசிகள் சூஃபி பாடல்களையும், இறுதியாக குண்டேச்சா சகோதர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் பாதரசத்தை கொண்டு ரச வைத்திய முறையில் உருவாக்கப்பட்ட லிங்கங்களில் உலகில் இதுவே மிகப்பெரிய லிங்கம் ஆகும்.