கன்னியாகுமரி செய்திகள் மாவட்ட செய்திகள் தொகுதி மேம்பட்டு நிதியில்… புதிய அங்கன்வாடி கட்டிடம்… திறந்து வைத்த குமரி எம்.பி….!! Revathy Anish17 July 20240138 views கன்னியாகுமரி மாவட்டம் கோதநல்லூர் ஈத்தவிளை பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் தொகுதி மேம்பாட்டு நிதி 14 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கட்டிடத்தை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்துள்ளார். இந்த திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து அவர் மறைந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஜெபின் சார்லஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.