Home செய்திகள் கிரேனில் இருந்து விழுந்த கண்டெய்னர்… டிரைவர் உடல் நசுங்கி பலி… துறைமுகத்தில் ஏற்பட்ட பரபரப்பு…!!

கிரேனில் இருந்து விழுந்த கண்டெய்னர்… டிரைவர் உடல் நசுங்கி பலி… துறைமுகத்தில் ஏற்பட்ட பரபரப்பு…!!

by Revathy Anish
0 comment

சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அதிக எடை கொண்ட கண்டெய்னர் ஒன்றை கிரேன் மூலம் தூக்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கண்டெய்னர் கீழே விழுந்தது. அப்போது அந்த கண்டெய்னர் கீழே நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் அருகில் நின்று கொண்டிருந்த 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.