தொடரும் கஞ்சா விற்பனை… 4 பேர் அதிரடி கைது… 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்…!!

கடலூர் மாவட்டம் சூப்பிரண்டு அதிகாரி உத்தரவின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனை குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மதுவிலக்கு போலீசார் விருத்தாசலம் பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகம்படும் படி 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூரை சேர்ந்த சதீஷ்(30), ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மகாராணா(29) என்பதும், இவர்கள் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில் இவர்களிடம் இருந்து கஞ்சா வாங்கி விற்பனை செய்து வரும் விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த சதாம்(23), ராஜா(36) ஆகியோரையும் கைது செய்து சுமார் 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!