செய்திகள் மாநில செய்திகள் தமிழக வெற்றிக்கழக கொடி குறித்த சர்ச்சை… விஜய்க்கு ஆதரவு அளித்த சீமான்…!! Revathy Anish24 August 2024062 views வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தற்போது தனது கட்சி கொடி மற்றும் கழகத்தின் பாடலையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக கொடி ஸ்பெயின் நாட்டை அவமதிக்கும் வகையிலும், இந்திய தேர்தல் விதிகளுக்கு புறம்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்யின் கட்சி கொடியில் எந்த சர்ச்சையும் இல்லை என கூறியுள்ளார். யானை என்பது தனி மனிதனுக்கு கட்சிக்கும் சொந்தமில்லை என தெரிவித்தார். மேலும் இது தமிழரின் மரபு என்றும், யானை படையை வைத்து போரை வென்று வாகை மலரை சூடுவது போல இந்த கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இதை நாம் பாராட்ட வேண்டும் என சீமான் குறிப்பிட்டுள்ளார்.