செய்திகள் சேலம் மாவட்ட செய்திகள் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள்… வேறு சிறைக்கு அதிரடி மற்றம்… டி.ஜி.பி. நடவடிக்கை…!! Revathy Anish9 July 2024076 views கடந்த 2019-ஆம் ஆண்டு கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தவ்பீக் மற்றும் அப்துல் தாமீம் ஆகியோர் அவரை படுகொலை செய்தனர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைத்திருந்தனர். இந்நிலையில் ஒருங்கிணைந்த சோதனை குழுவினர் மத்திய சிறையில் சோதனை நடத்திய நிலையில் அப்துல் தாமீம், தவ்பீக் ஆகியோர் தங்களது அறையில் சோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த சிறைத்துறை டி.ஜி.பி மகேஸ்வர்தயாள் அவர்கள் இருவரையும் வெவ்வேறு சிறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் அப்துல் தாமீம் கோவை மத்திய சிறையிலும், தவ்பீக்கை கடலூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.