Home செய்திகள் பெண்ணுக்கு நடந்த கொடுமை… அலட்சியம் காட்டிய பெண் எஸ்.ஐ… அதிரடி சஸ்பெண்ட்…!!

பெண்ணுக்கு நடந்த கொடுமை… அலட்சியம் காட்டிய பெண் எஸ்.ஐ… அதிரடி சஸ்பெண்ட்…!!

by Revathy Anish
0 comment

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 22 வயது பெண் ஒருவர் கூட்டு பாலியன் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுவன் மற்றும் 3 வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் பெண் எஸ்.ஐ அலட்சியமாக இருப்பதாக புகார்கள் எழுந்தது.

இந்நிலையில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், அலட்சியமாக செயல்பட்ட பெண் எஸ்.ஐ சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த டி.ஜி.பி இந்த வழக்கை விசாரித்த பெண் எஸ்.ஐ சூர்யாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.