நகை கடைக்கு படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்… ஒரே நாளில் இவ்வளவு விற்பனையா…?

மத்திய அரசு நேற்று பஜ்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றின் இறக்குமதி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு 2,200 ரூபாய் குறைந்த நிலையில் ஒரு பவுன் தங்கம் 52,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றும் பவுனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது.

எனவே இன்று ஒரு கிராம் தங்கம் 6,490 ரூபாய்க்கும், ஒரு பவுன் 51,920 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. இதனை அறிந்த நகை பிரியர்கள் நகைக்கடைகளுக்கு படையெடுத்தனர். இன்று ஒரே நாளில் 10% விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது கடைகளில் ஆடி சிறப்பு விற்பனையும் நடைபெற்று வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!