தினமும் திருவிளையாடல் நிகழ்ச்சி… ஆவணி திருவிழா… களைகட்டும் மீனாட்சி அம்மன் கோவில்…!!

மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆவணி மூல திருவிழா வருகின்ற 3ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிளையாடல்கள் நிறைந்த இந்த திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இந்நிலையில் 30-ஆம் தேதி காலை 9.55 மணியில் இருந்து 10.19 மணிக்குள் கொடியேற்றப்பட்டு தொடங்கும் இந்த மூலத் திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

64 திருவிடையாடல்களில் 12 சிறுவிளையாடல்கள் ஆவணி மூலத் திருவிழாவில் முக்கியமாக உள்ளது. இதில் செப்டம்பர் 13ஆம் தேதி புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை அடுத்து செப்டம்பர் 16ஆம் தேதி திருத்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான பணிகளை கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

Related posts

மீனம் ராசிக்கு…! நம்பிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும்..! அதிகாரம் செய்யக்கூடிய பதவி கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசிக்கு…! மற்றவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள்…! சிரமப்படாமல் பணிகளில் ஈடுபடுவீர்கள்…!!

சிம்மம் ராசிக்கு…! தொட்ட குறை விட்ட குறை எல்லாம் சரியாகும்…! கேட்ட இடத்தில் பண வரவு கண்டிப்பாக கிடைக்கும்…!!