செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர் மகள்-மனைவி தற்கொலை வழக்கு… கணவன் அதிரடி கைது… போலீஸ் விசாரணை…!! Revathy Anish21 July 20240193 views வேலூர் மாவட்டம் கந்தனேரி பிள்ளையார் கோவில் தெருவில் குமார்(30) என்பவர் வசித்து வருகிறார். கார் மெக்கானிக் தொழில் செய்து வரும் இவருக்கு பிரவீனா என்ற மனைவியும் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் குமார் மற்றும் அவரது தாயார் வரதட்சனை கேட்டு பிரவீனாவை கொடுமைப்படுத்தி வந்தனர். இதனால் மனமுடைந்த பிரவீனா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது ஒரு வயது குழந்தையை உடம்புடன் கட்டிக் கொண்டு அப்பகுதியில் உள்ள விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது பிரவீனாவை தற்கொலைக்கு தூண்டியது குமார் தான் என்று உறுதியான நிலையில் அவரை கைது செய்ய வேலூர் மாவட்ட துணை சூப்பிரண்டு போலீஸ் பரிந்துரை செய்துள்ளார். அதன் அடிப்படையில் பள்ளிகொண்டா காவல்துறையினர் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.