கன்னியாகுமரி செய்திகள் மாவட்ட செய்திகள் கடன் தொல்லை… பிறந்தநாளில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குளச்சல் அருகே சோகம்…!! Revathy Anish26 July 20240115 views கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உடையார்விளை பகுதியில் தினேஷ்பாபு(31) என்பவர் வசித்து வருகிறார். தையல் மற்றும் ஆரி ஒர்க் வேலை செய்து வரும் இவர் நாகர்கோவிலை சேர்ந்த சாந்தி என்ற பெண்ணை ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தி உடல் நலக்குறைவால் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து தினேஷ்பாபுவுக்கும் தொழிலில் தொடர் நஷ்டம் ஏற்பட்டதினால் 10 லட்சம் ரூபாய் வரை கடன் ஏற்பட்டுள்ளது. அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தினேஷ் பாபு தாது 31 வது பிறந்தநாள் கொண்டாடுவதற்காக மனைவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவியை பார்த்துவிட்டு பிறந்த நாளை கொண்டாடிய அவர் மாலையில் மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். ஏற்கனவே கடன் தொல்லையால் விரக்தியில் இருந்த தினேஷ்பாபு பிறந்தநாளை கொண்டாடிவிட்டு இரவு வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.