செய்திகள் தேசிய செய்திகள் உயிரைப் பறிக்கும் டெங்கு…. மருத்துவ மாணவர் உட்பட 4 பேர் பலி….!! Revathy Anish20 July 20240160 views கர்நாடகவை சேர்ந்த குஷால் என்பவர் மருத்துவ கல்லூரி ஒன்றில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதனைத் தொடர்ந்து குஷாலும் சில தினங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் குஷாலின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஹசன் நகரில் இதுவரை 3 குழந்தைகள் உட்பட நான்கு பேர் டெங்குவுக்கு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.