செய்திகள் மதுரை மாவட்ட செய்திகள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான்… பேட்டி அளித்த அமைச்சர் பி. மூர்த்தி…!! Revathy Anish29 August 20240191 views மதுரை மாவட்டத்திலுள்ள லேடி டோக் கல்லூரியில் இன்று கல்வி கடன் மேளா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் பெண்கள் அதிக அளவில் படித்து முன்னேறுகிறார்கள் எனவும், சில ஆண்டுகளில் பெண்கள் பல்வேறு பெரிய பதவிகளில் இருப்பார்கள் என அவர் தெரிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜி.எஸ்.டி எண்ணை வாங்கிக் கொண்டு யாரெல்லாம் சரிவர தொழிலை செய்யாமல் இருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். வணிகத்துறையில் கடந்த ஆண்டை விட 4000 கோடி ரூபாய் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது. மேலும் வருகின்ற செப்டம்பர் 9-ம் தேதி மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. அதில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். குறிப்பாக அவர் விரைவில் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என நங்கள் நம்புகிறோம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.