செய்திகள் தூத்துக்குடி மாவட்ட செய்திகள் திருச்செந்தூர் கோவிலுக்கு திரண்ட பக்தர்கள்… 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!! Revathy Anish18 August 20240106 views உலக பிரசித்தி பெற்ற கோவிலான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு திரண்டனர். இதனையடுத்து அவர்கள் கடலில் புனித நீராடி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர். வழக்கத்தை விட அதிக கூட்டம் இருந்ததால் பக்தர்கள் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் அவர்களுடைய வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டனர்.